எமது நோக்கு
மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழிவகுக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.- அறிமுகம்
இபலோகம பிரதேச சபையானது தனித்துவமனதும் புரதானமான வரலாற்று சிறப்புமிக்க விஜிதபுர ரஜமகா விகாரை மற்றும் கலாவாவியையும் உள்ளடக்கியது. மேலும் பண்டைய குடியேற்ற கிராமங்களான சேனபுர போன்ற கிராமங்களும் அமைந்துள்ளது. இங்கு பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் ஹிந்து மதங்களை சேர்ந்த்த அண்ணளவாக 42812 மக்கள் வசித்து வருகின்றனர்.
- அமைவிடம்
அனுராதபுர மாவட்டத்தில் 22 பிரதேச செயலக பிரிவுகள் அமையப்பெற்றுள்ளன. இபலோகம பிரதேச சபையானது தலாவ, திறப்பன, கெகிராவ, பலாகல மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச சபைகளுக்கு மத்தியில் அமையபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 124 - 130 மீட்டர் உயரத்திலும் வருடாந்த சராசரி வேப்பநிலையாக 80 டிகிரி பரன்ஹைட்டும் காணப்படுகிறது. வருடாந்த மழை வீழ்ச்சியானது 60-80 அங்குலமகவும் அதிகரித்துள்ளது. இபலோகம பிரதேச சபையானது அனுராதபுர நகரத்திருந்து 50 km தூரத்திலும் கெகிராவ நகரத்திருந்து 11 km தூரத்திலும் அமைந்துள்ளது.
- இடப்பரம்பல்
இந்த பிரதேச சபையானது 113 கிராமங்களையும் 32 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடங்களாக 134 km² மொத்த பரப்பையும் கொண்டுள்ளது. இபலோகம பிரதேச சபையானது மொத்தமாக 1622 km நீளமான பாதைகளை கொண்டுள்ளது. பெரிய கிராம சேவகர் பிரிவாக குஞ்சிகுளமயும் (18.67 km²) சிறிய பிரதேசா சபையாக கலாவெவயும் (1.08 km²) காணப்படுகிறது.
- நீர் வளங்கள்
இந்த பிரதேச செயலகமானது வரலாற்று சிறப்பு மிக்க விவசாய மற்றும் நீர் பாசன முறைகலால் கட்டியெழுப்பட்டது. இப்பிரதேசத்தின் பிரதான நீர் விநியோக மார்கமாக யோதஎல மற்றும் ஜயகங்கையும் கொண்டுள்ளது. மேலும் பிரதான பெரிய குளமான கலாவாவியையும் அதனுடன் இணைக்கப்பட்ட 74 சிரு குளங்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் 54 km தூரத்தில் உள்ள திஸ்ஸவாவிக்கும் நீர் விநியோகிக்ககபடுகிறது.
- உயிர் பல்வகைமை
விவசாயத்தின் அடிப்படையில் இந்த பிரதேசம் வரல் வலயத்தில் கானப்படுகின்றது. மேலும் காடுகளையும் இப்பகுதிக்கு உரித்தான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளையும் கொண்டுள்ளது. இப்பிரதேச மக்கள் மக இலுப்பல்லம ஆய்வு நிலையம் மற்றும் பெராதேனிய பல்கலைக்கழக விவாசாய பீடத்தினாலும் உதவிகளும் அறிவுரைகளும் வழங்கப்படுகின்றது.
- சனத்தொகை
மொத்த சனத்தொகையாக 42812 நபர்களை கொண்டுள்ளதுடன் அதனுள் 35474 சிங்களவர்களும் 7002 முஸ்லிம்கலும் அண்ணளவாக 115 தமிழர்களும் வாழ்கின்றனர். மத ரீதியாக பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதிக சனத்தொகை குஞ்சிகுலத்திலும் குறைந்த சனத்தொகை அமனகட்டுவ கிராம சேவகர் பிரிவிலும் காணப்படுகிறது.
- விவசாயம்
இராசரட்டை பிரதேசத்தின் வயல் நிலங்களின் பிரதான பயிராக நெல் வேளாண்மை காணபடுவதுடன் இவை 74 குளங்கள், மகாவலி நீர் வளங்கள் திட்டம் மற்றும் மழை நீராலும் போசிக்கபடுகிறது. மேலும் மேட்டுநிலப்பயிர்களும் பயிசெய்யப்டுகின்றது.
பிரதேச செயலாளர்களின் சேவைக்காலம்
| Name | From | To |
| Mr. Ranjith Darmasena | 1991 | 1994 |
| Mr. U.D. Yapa | 1994 | 1996 |
| Mr. Sarath Wijesinghe | 1996 | 2000 |
| Mr. A.M.K.B. Adikari | 2001 | 2005 |
| Mr. K.B. Hettiarachchi | 2005 | 2007 |
| Mr. H.M.P. Bandara | 2007 | |
| Mr. R.P Sathkumara | 2007 | 2011 |
| Mrs. M.S.S. Sajidha Banu |
2012 |
2018 |
| Mrs. E.A.S. Edirisinghe | 2018.05.15 | 2018.10.31 |














